கட்டட பணியில் புதுமை: பாலிதீனில் தரை தொட்டி

விருதுநகர்விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு தேவையான தண்ணீரை பாலிதீன் தொட்டி அமைத்து சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தை பொதுப்பணித்துறை அறிமுகம் செய்துள்ளது.உப்பு தண்ணீரை கட்டுமான பணிக்கு பயன்படுத்தினால் சில ஆண்டுகளில் சிமென்ட் பூச்சில் ஈரம் படிந்து பெயர்ந்து விழும். காங்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து பல்லிளித்து விடும்.

கட்டுமானமும் ஸ்திரத்தன்மையுடன் இருக்காது. இப்பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு விருதுநகர் மருத்துவ கல்லுாரி கட்டுமான பணிக்கு உப்பு தண்ணீருக்கு பதிலாக உப்பு இல்லாத நல்ல தண்ணீரை பொதுப்பணித்துறை பயன்படுத்தி வருகிறது. இதற்காக கட்டுமானம் நடக்கும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் பாலிதீன் தொட்டி அமைத்துள்ளனர். 30 அடி நீளம், 30 அடி அகலத்தில் 5 அடி பள்ளம் தோண்டினர். அதன் மீது பாலிதீன் விரிப்பை தொட்டி போல் உருமாற்றினர். அதில் லாரிகள் மூலம் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஊற்றி சேமித்து வைத்துள்ளனர். இதிலிருந்து மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு கட்டுமான சிமென்ட் பூச்சுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

Related posts

Leave a Comment