ஊரணியில் மழை நீர் சேமிக்கும் முன் மாதிரி கிராமம்

விருதுநகர் : விருதுநகர் அருகே செங்கோட்டை கிராமம் கல்கோட்டை அமைத்து மழை நீர் சேமிப்பில் முன் மாதிரியாக விளங்கி வருகிறது.

தமிழ்நாடு நீர் வள ஆதார பாதுகாப்பு மற்றும் மேலாண்மை இயக்கம் சார்பில் இக்கிராமத்தில் மழை நீர் சேமிக்க 2019- – 20ம் நிதியாண்டில் திட்டம் வகுக்கப்பட்டது. ரூ.15 லட்சம் மதிப்பில் இங்குள்ள பேரையூர் ரோட்டில் பழைய ஊரணியை துார் வாரப்பட்டு படிக்கட்டுகள் அமைக்கப் பட்டன. ஊரணி நடுவோ 30 அடி அகலம், 50 அடி நீளம், 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி மழை நீர் சேகரிப்பு மெகா தொட்டி அமைக்கப்பட்டது.

இதை சுற்றிலும் காங்கிரீட் சுற்றுச்சுவர் எழுப்பி பக்கவாட்டு பகுதியில் கல் கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. மழை பெய்யும் போது வெட்ட வெளியில் பாய்ந்தோடும் வெள்ள நீர் ஊரணிக்குள் திருப்பி விடப்படுகிறது. தற்போதைய மழையால் ஊரணி நிரம்பி வழிகிறது.

Related posts

Leave a Comment