எண்ணெயில் பொறித்தாலே ‘ரெடி’

சாத்துார்கடல் சார் உணவுகள் (சீபுட்ஸ்) உடலுக்கு நன்மை பயக்ககூடியவை . மீனின் புரதச்சத்து மனிதர்கள் ஆரோக்கியம் காக்கும் மருந்தாக உள்ளது.

விட்டமின் ஏ, பி,சி, சிங்க் போன்ற சத்துக்கள் அடங்கி இருப்பதால் கடல் நண்டு, இறால் போன்ற மீன் வகைகளை ருசிப்போர் ஏராளம். தற்போது பெரும்பாலான வீடுகளில் சமைக்கும் பழக்கம் குறைந்து வரும் நிலையில் பலர் ஓட்டல்களில் ஆர்டர் செய்வது அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப பல்வேறு நிறுவனங்கள் உணவுகளை வித்தியாச முறையில் வழங்க துவங்கி விட்டன. அந்தவகையில் மீன்களில் நண்டு குழம்பு, நண்டு வறுவல் , மீன் குழம்பு என்று இல்லாமல் நண்டு சமோசா, நண்டு லாலிபாப் , மீன் சமோசா, இறால் சமோசா, பிஷ் பிங்கர், பிஷ் 65 போன்ற வகை உணவுகள் அறிமுகம் செய்துள்ளனர்.

வெளிநாடுகளுக்கு துாத்துக்குடி இருந்து ஏற்றுமதியாகும் இது போன்ற வகைகள் தற்போது நம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வகை உணவுகள் மசால் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை எண்ணெயில் பொரித்து சாப்பிடும் வகையில் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இவைகள் சாத்துார் பகுதியில் பிரியா புட்ஸ் நிறுவனம் விற்பனை வருகிறது.

Related posts

Leave a Comment