ஸ்ரீவி.,யில் அரசு கலைக்கல்லுாரி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் அரசு கலைகல்லுாரி துவங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக சந்திரபிரபா எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கோரிக்கை எழுப்பியும், முதல்வரை நேரில் சந்தித்தும் மனு கொடுத்தேன். அதன்படி நடப்பு கல்வியாண்டில் கலைக்கல்லுாரி துவங்க முதல்வர் அனுமதியளித்துள்ளார். தற்காலிகமாக திருமுக்குளம் நகராட்சி பயணியர் கட்டடத்தில் கல்லுாரி செயல்பட பரிசீலிக்கபட்டு வருகிறது,என்றார். இதை தொடர்ந்து அவர் பஸ் ஸ்டாண்டில் மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிலவள வங்கி தலைவர் முத்தையா கட்சியினர் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment