திமுக முன்வைக்கும் அடுத்த முழக்கம்.. தமிழ் எங்கள் உயிர்.. மு.க.ஸ்டாலின் அணிந்த கலக்கல் டி -ஷர்ட்..

சென்னை: தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் அணிந்தவாறு தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இன்று காலை சைக்கிளிங் உடற்பயிற்சிக்கு சென்ற போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தி தெரியாது போடா என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட் டிரெண்ட் ஆகி வரும் நிலையில் இப்போது தமிழ் எங்கள் உயிர் என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட் டிரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளது.

நவீன வடிவில்

நவீன வடிவில் இந்திக்கு எதிரான குரல் நாளுக்கு நாள் தமிழகத்தில் வலுவடைந்து வருகிறது. கைகளில் பதாகைகள் தாங்கி அடிவயிற்றில் இருந்து முழக்கம் எழுப்பி போராடியது அந்தக் காலம் என்றால், சொல்லவரும் கருத்தை தொழில்நுட்ப திட்பத்தால் வெளிப்படுத்தி அந்த தகவல் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைய வைப்பது இந்தக் காலம்.

தமிழ் எங்கள் உயிர் இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதுடன் வைரலாகவும் உள்ளது. ”தமிழ் எங்கள் உயிர்” என்ற வாசகம் தாங்கிய டி-ஷர்ட்டில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன. அதன் பின்னணியில் தமிழக வரைபடம் இருக்கிறது. சைக்கிளிங் உடற்பயிற்சிக்கு சென்ற போது இந்த டி-ஷர்ட்டை மு.க.ஸ்டாலின் அணிந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தி எதிர்ப்பு இதனிடையே இந்தி மொழியை திமுக ஒரு போதும் எதிர்க்கவில்லை என்றும் இந்தி திணிப்பை தான் எதிர்த்து வருவதாகவும் அக்கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்தியை மும்மொழி கொள்கை உள்ளிட்ட பல வழிகளில் தமிழகத்திற்குள் திணிப்பதை தான் திமுக கண்டித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படியோ தமிழகத்தில் நவீன மொழிப்போர் ஒன்று இணையத்தில் தற்போது நடைபெற்று வருவதை மட்டும் அறிய முடிகிறது.

Related posts

Leave a Comment