தரையில் அமரும் பஞ்., தலைவி துணை தலைவர் மீது புகார்

விருதுநகர்:தரையில் அமர செய்து துணைத் தலைவர் ஆதிக்கம் செலுத்துவதாக, கலெக்டரிடம் பெண் ஊராட்சி தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், குருமூர்த்திநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் முத்துலெட்சுமி, கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனு:நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால், துணைத் தலைவர் வரதராஜன், தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து, என்னை தரையில் அமர வைக்கிறார். விருப்பம் இல்லை எனில், வெளியில் நிற்க வேண்டும் என்கிறார்.

தொடர்ந்து என்னை இழிவுப்படுத்தும் விதமாக, ஆதிக்கம் செலுத்துவதோடு, ஊராட்சி பணிகளையும் செய்ய விடாமல் தடுக்கிறார்.இவ்வாறு, குறிப்பிட்டுள்ளார்.

முத்துலெட்சுமி கூறுகையில், ”துணைத் தலைவர் வரதராஜன், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறார். என்னை நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்ள விடுவதில்லை. இதுவரை, ஊராட்சி தலைவர் நாற்காலியில் நான் அமர்ந்ததே இல்லை,” என்றார். துணைத் தலைவர் வரதராஜன் கூறும்போது, ”இது பொய் புகார். இன்று நடக்கும் விசாரணை கூட்டத்தில், உண்மை நிலவரம் தெரியும்,” என்றார்.

Related posts

Leave a Comment