அரசியலில் மாற்றம் வேண்டும் : ம. நீ.ம.,தலைவர் கமல் பேச்சு

அருப்புக்கோட்டை : ”தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும்,”என, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேசினார்.

அருப்புக்கோட்டையில் நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கும் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியதாவது : தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும். தற்போதைய நிலைமை பார்த்து படித்தவர்கள் உட்பட பலரும் கொதித்து போய் உள்ளனர். ஓட்டு போடுவது உங்கள் கடமை.அதை யாருக்கு போடுவது என்பது உங்கள் உரிமை. நல்ல நேர்மையாளர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் , என்றார்.மாநில பொது செயலாளர் உமாதேவி, சந்தோஷ் பாபு, முருகானந்தம், கிழக்கு மாவட்ட செயலர் பாஸ்கரன், மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் , பொருளாளர் மணிகண்டன், தொகுதி பொறுப்பாளர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment