விருதுநகர் ஆசிரியை வீட்டில் 60 பவுன் மாயம்

விருதுநகர் பி.பி.வையாபுரி தெருவை சேர்ந்தவர் சுதாதேவி(41), இவர் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக பணியில் உள்ளார்.

கணவரை பிரிந்து மகன் ஐஸ்வர்ராஜா(18) உடன் வசித்து வருகிறார். வீட்டு பீரோவில் வைத்திருந்த 60 பவுன் நகையை கடந்த டிச.13ம் தேதி பார்த்துள்ளார். இந்நிலையில் மதுரையை சேர்ந்த இவரின் தோழி கண்ணகி ரூ.2லட்சம் பணம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை, நகையை அடமானம் வைத்து தருவதாக தெரிவித்துள்ளார்.

நகையை அடகு வைப்பதற்காக நேற்று பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 60 பவுன் நகையை காணவில்லை. இது தொடர்பாக மேற்கு போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் மோப்பநாய், கைரேகை பிரிவு அலுவலர்கள் உதவியுடன் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Related posts

Leave a Comment