தொடர் மழையால் அழுகியது மல்லி, சூரியகாந்தி ; விரக்தியில் விவசாயிகள்

அருப்புக்கோட்டை: தொடர் மழையின் காரணமாக மல்லி, சூரியகாந்தி உள்ளிட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் பாழாகி விட்டதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.10 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையில் அருப்புக்கோட்டை, பெரிய மற்றும் சின்ன புளியம்பட்டி, அம்பல தேவநத்தம் மற்றும் சுற்றுகிராமங்களில் மல்லி , சூரியகாந்தி, கம்பு, சோளம், பருத்தி பயிர்கள் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டன.அறுவடை செய்யும் நேரத்தில் நிலங்களில் தண்ணீர் தேங்கி மல்லி செடி அழுகி சாய்ந்து விட்டது. காயக்கின்ற பருவத்தில் சூரிய காந்தி காய்கள் கருகி விட்டன. சோளம் கருகி கதிர்களிலே முளை விட்டுள்ளது. பருத்தி செடிகளும் கருகி விட்டன. பாதிப்பை உணர்ந்து செய்வதறியாது விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Related posts

Leave a Comment