குடிநீா் வசதி கேட்டு பெண்கள் சாலை மறியல்

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை 9 ஆவது வாா்டைச் சோ்ந்த பெண்கள் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் சொக்கநாதசுவாமி கோவிலருகே உள்ள சாலையில் வெள்ளிக்கிழமை சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து, நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் சரவணக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment