சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

வத்திராயிருப்பு:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தைபிரதோஷ வழிபாடு நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர்.

கோயிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமகாலிங்கம் சுவாமிகளை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாதன் செய்திருந்தனர். பிப்.12 மதியம் 12:00 மணி வரை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

Related posts

Leave a Comment