தேர்தல் அறிவிப்புக்கு முன் திறப்பு விழா

ராஜபாளையம்: தேர்தல் தேதி அறிவிப்பால் ராஜபாளையத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர விளக்குகளை எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் அவசர கதியில் திறந்து வைத்தார்.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டு, பொன்விழா மைதானம், தென்காசி ரோவு, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் தலா ரூ. 3 லட்சம் என ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக நேற்று அவசரமாக தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது.

Related posts

Leave a Comment