3232 கி.மீ., விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

ராஜபாளையம், : சென்னை கொரட்டூர் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த சதீஷ் குமார் 29, போலியோ சொட்டு மருந்து அவசியம் குறித்து விழிப்புணர்வுஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதற்காக 3232 கி. மீ., சைக்கிள் பயணத்தை சென்னையில் தொடங்கி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மீண்டும் சென்னை திரும்புகிறார். வழியில்ராஜபாளையம் ரோட்டரி கிங் சிட்டி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.உறுப்பினர்கள் வள்ளிநாயகம், கோபாலகிருஷ்ணன், சிவகுமார்,செல்வா, பீம்ஆனந்த் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தீபா மோட்டார்ஸ் முத்துகுமார் செய்திருந்தார்.

Related posts

Leave a Comment