அனைத்து திட்டங்களும் என்னால்தான் வந்தது: தி.மு.க., வேட்பாளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., பிரசாரம்

ராஜபாளையம்: ”ராஜபாளையத்தில் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களும் என்னால் தான் வந்தது ,” என தி.மு.க.,வேட்பாளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

ராஜபாளையம் தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., தங்கப்பாண்யடின் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். சேத்துார் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் கோயிலில் வழிபட்ட பின் ராஜபாளையம் பச்சமடம் தெருவில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். வழியில் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.பிரசாரத்தில் அவர் பேசியதாவது: ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடை, கூட்டுக் குடிநீர் திட்டம், புறவழிச் சாலைத் திட்டம் அனைத்து திட்டங்களும் கொண்டு வந்தது தி.மு.க., எம்.எல்.ஏ., வான நான் தான்.வாக்காளர்கள் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். இன்னும் ஏராளமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. இந்த மண்ணில் பிறந்த, இந்த மண்ணின் மைந்தனான எனக்கு வாய்ப்பளிக்கும் போது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை ஹைடெக் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பெட்டியடன் வருவார்கள், பெட்டியுடன் சென்று விடுவார்கள். கடந்த 5 மாதங்களாக பெட்டியுடன் வந்த பா.ஜ., பொறுப்பாளர் நடிகை கவுதமியை தற்போது காணவில்லை. மற்றொருவர் தற்போது பெட்டியுடன் வந்துள்ளார். அவர் பெட்டியுடன் திரும்பி செல்ல பொதுமக்கள் எனக்கு உதவ வேண்டும். சசிகலாவுக்கு விசுவாசமாக இல்லாத முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் தமிழக மக்களுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள்,என்றார்.

Related posts

Leave a Comment