பரிதவிப்பு! தேர்தல் நேரத்தில் இணைய சர்வர்கள் கோளாறு …. அதிகாரிகள், கட்சியினர் படும்பாடு திண்டாட்டம்

விருதுநகர், : மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் இணைய சர்வர்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் அதிகாரிகள், கட்சியினர் படும்பாடு சொல்லி மாளாது.

போதாக்குறைக்கு அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படுவதால் தேர்தல் பணிகள் முற்றிலும் முடங்கி வருகிறது.மாவட்டத்தில் ஏழு தொகுதிகளுக்கும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மார்ச் 19 வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. அதிகாரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு இணைய சர்வர்களின் வேகம் இல்லை. இணைய தள வேகத்தின் திறன் குறைவாக இருப்பதால் அவ்வப்போது சர்வர்களில் கோளாறு ஏற்படுகிறது.

அன்றாடம் வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் விவரம், கட்சிகளின் பிரசாரங்களுக்கு இணைய வழியில் அனுமதி வழங்குதல், பறக்கும்படை, கண்காணிப்பு படையினரின் வாகன சோதனையில் சிக்கும் கணக்கில் வராத ரூ.பல லட்சம் குறித்து இணைய வழியில் பதிவேற்றம் செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி பரிதவிக்கின்றனர். தகவல் தாமதமாக வருவதாக உயர் அதிகாரிகள் கண்டிப்பு காட்டுவதால் பணிகள் ஸ்தம்பிக்கிறது…….சுணக்கம் கூடாதுதேர்தல் பணிகளில் அதிகாரிகள், கட்சியினர் விறுவிறுப்பாக இருக்கும் சூழ்நிலையில் ,கூடுதல் திறன் கொண்ட இணைய சர்வர்களை பயன்படுத்த வேண்டியது அவசியம். ஓட்டை, உடைசல் கம்ப்யூட்டர்கள், கூடுதல் திறன் அல்லாத சர்வர்களை உடனடியாக மாற்ற விட்டு கூடுதல் திறன் கொண்ட சர்வர் வசதியை ஏற்படுத்தி பணியில் சுணக்கம் காட்டாமல் இருக்க ,மாவட்ட தேர்தல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காளிதாஸ், சமூக ஆர்வலர், விருதுநகர்……..

Related posts

Leave a Comment