என்றும் விசுவாசமாக இருப்பேன் : சாத்தூர் அ.ம.மு.க., வேட்பாளர் ராஜவர்மன் உருக்கம்

சாத்துார்: ”மக்களுக்காக நான் என்றும் விசுவாசமாக இருப்பேன்,”என சாத்துார் தொகுதி அ.ம.மு.க.,வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., கூறினார்.தொகுதிக்குட்பட்ட எஸ்.ராமலிங்காபுரம், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம், கீழராஜகுலராமன் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: நான் லாரி, கார் டிரைவராக, தொழிலாளியாக இருந்தவன். ஒரு தொழிலாளி படும் கஷ்டம் இன்னொரு தொழிலாளிக்குதான் தெரியும். இப்பகுதி தொழிலாளர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதி. குறிப்பாக பேண்டேஜ் தொழிலாளர்கள் படும் கஷ்டத்தை நன்கு அறிந்தவன். எம்.எல்.ஏ.,வாக பொறுப்பேற்ற நாளில் இருந்து இப்பகுதிக்கு தேவையான ரோடு, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து தந்துள்ளேன். பேண்டேஜ் விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, இத் தொழிலுக்கு தேவையான வரி சலுகைகளை அளிக்க சட்டசபை,முதல்வரிடம் வலியுறுத்தினேன். உங்களுக்காக நான் என்றும் விசுவாசமாக இருப்பேன். குடிநீர் மேல்நிலைத்தொட்டி, குளியல்தொட்டி, மினிபவர் பம்பு, தெருவிளக்குகளை எம்.எல்.ஏ., நிதியில் செய்து தந்துள்ளேன். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசமாட்டேன், என்றார். ராமராஜ் பாண்டியன், மணிகண்டன், கவிதா, சங்கைவேல்முருகன், முருகன், வாசன் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment