சிவகாசி அரசு மருத்துவமனைக்கு இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய சமூக ஆர்வலர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆதரவற்றவர்கள், முதியவர்கள், சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு உணவுகள், குடிநீர் பாட்டில்கள் வழங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது, தொற்று குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது, இலவச ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இன்று சமூக ஆர்வலர் டேனியல், 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமாரிடம் வழங்கினார். இந்த 2 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், சார் ஆட்சியர் தினேஷ்குமார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அய்யனாரிடம் வழங்கினார். ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சமூக ஆர்வலருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

Leave a Comment