ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையம், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார்

நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்ற, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ தங்கப்பாண்டியன் புதிய நெல் கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. பெரும்பாலும் நெல் விவசாயம் இந்தப்பகுதியில் அதிகமாக நடந்து வருகிறது. ஆனால் இந்தப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள், விளைந்த நெல்லை விற்பனை செய்வதற்கு கடுமையாக சிரமப்பட்டு வந்தனர். நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று, விவசாயிகள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் முயற்சியால் சேத்தூர், தேவதானம் பகுதியில் புதியதாக நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று காலத்திலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். சேத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகளின் நலனுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சேத்தூர் நெல் கொள்முதல் நிலையம், நெல்களம், உயர்கோபுரமின் விளக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும், தேவதானம் மற்றும் கோவிலூர் பகுதியில் நெற்களம் அமைத்துத்தரப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் மண்டல மேலாளர்

திருவாசகம்,  மாவட்ட ஆட்சியர் உதவியாளர் சங்கர் எஸ்.நாராயணன், சேத்தூர் பேரூர் செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி, ஒன்றிய கவுன்சிலர் ஏசம்மாள் அரிராம்சேட், அவைத்தலைவர் மிசா நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment