காரியாபட்டி அருகே ‘பசுமை விடியல்’: கலெக்டர் துவக்கினார்

காரியாபட்டி–காரியாபட்டி டி.செட் டிகுளம், காஞ்சிரங்குளம் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை மேம்படுத்துவதற்கு குறுங்காடு அமைக்கும் ‘பசுமை விடியல்’ திட்டத்திற்காக பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணியினை கலெக்டர் மேகநாத ரெட்டி துவக்கி வைத்தார்.இங்கு வேளாண்துறை மூலம் மண் பரிசோதனை செய்து இயற்கை முறையில் மண் வளம் மேம்படுத்தப்பட்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ. 50.10 லட்சம் மதிப்பில் 1050 பழ மரக்கன்றுகள், மரவேலைப்பாடு மரக்கன்றுகள் 800, ஆயிரத்து 200 மரக்கன்றுகளுடன் அடர் வன காடுகள், மருத்துவ செடிகள், பூச்செடிகள் ஆயிரம், நடைபாதை மரக்கன்றுகள் ஆயிரத்து 200, சுற்றுவேலி மரக்கன்றுகள் 1250, கால்நடை தீவன பயிர்கள் 6500 நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படும். மேலும் இத்திட்டத்தில் அசோலா தீவன பயிர் வளர்ப்பு, கால்நடை தண்ணீர் தொட்டி, மண்புழு உரக் கூடம், 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க பண்ணைக்குட்டை அமைக்கப்பட உள்ளது. டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, ஒன்றிய தலைவர் முத்துமாரி, மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தேம்பாவணி, ஊராட்சி தலைவர் வேங்கைமார்பன், மேலாண் இணை இயக்குனர் உத்தண்டராமன், கலெக்டர் நேர்முக உதவியாளர் சங்கரநாராயணன், பி.டி.ஓ.,சிவகுமார் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment