சாலை பராமரிப்பு ஊழியர் கூட்டம்

விருதுநகர்–விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை, சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வரவேற்றார். பொது செயலாளர் விஜயக்குமார் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்க பொருளாளர் ராமர், மாநில பொது செயலாளர் லெட்சுமிநாராயணன் பேசினர். 41 மாத பணிநீக்க காலத்தை பணி காலமாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் துவங்குவது, அதை தொடர்ந்து அமைச்சர்களை சந்திப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

Leave a Comment