விருதுநகர் எஸ்.பி.,க்கு ஜனாதிபதி விருது

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விருதுக்கு விருதுநகர் எஸ்.பி., மனோகர் உட்பட மூன்று போலீஸ் அலுவலர்கள் தேர்வாகி உள்ளனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ்துறையின் 24 அலுவலர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. அலுவலர்களின் செயல்பாடு, சாதனைகள், நன்மதிப்பு அடிப்படையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.பி.,மனோகர், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கருப்பையா, (தற்போது தேனி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,), ஸ்ரீவில்லிபுத்துார் டி.எஸ்.பி., நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் விருதுகளை சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

Related posts

Leave a Comment