ஆக. 19ல் ஊதிய ஆலோசனை கூட்டம்

விருதுநகர் : தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ்: தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க ஆலோசனை குழு அமைக்கப்பட்டது.

மதுரை தொழிலாளர் இணை ஆணையர் தலைவராகவும், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் செயலாளராகவும் களப்பணிகள் மேற்கொண்டனர்.இது தொடர்பாக நாளை மறுநாள் (ஆக. 19) விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் ராம்கோ சிமென்ட் ஆலையில் உள்ள கூட்டரங்கில் இறுதி ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. தொழிலாளர்கள் ஊதிய நிர்ணயம் தொடர்பாக கருத்துரு மனுக்களை வழங்கலாம், என்றார்.

Related posts

Leave a Comment