ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : 2022 மார்ச் 31 வரை முடக்கி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் உயர்த்தி வழங்குவது, குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1 லட்சமாக வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி.விருதுநகரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் குருசாமி தலைமை வகித்தார். செயலாளர் ராமசுப்புராஜ், ஓய்வுபள்ளி கல்லுாரி அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் சிவபெருமான், ஓய்வுபி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அய்யாசாமி, வங்கி ஓய்வூதியர் அமைப்பு நிர்வாகி மாரிக்கனி, ஓய்வுமின்வாரிய மாவட்ட தலைவர் சந்தியாகப்பன், அரசு ஊழியர் சங்க துணை தலைவர் கண்ணன், மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி பேசினர். கிளை தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Related posts

Leave a Comment