விபத்திற்கு வழிவகுக்கும் ‘ஈகோ’; விழிப்புணர்வு வகுப்பில் அறிவுரை

சிவகாசி : ”டிரைவர்களுக்குள் ஏற்படும் ‘ஈகோ’ அதிக விபத்திற்கு வழிவகுக்கிறது,” என, சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் பேசினார்.இந்திய பெட்ரோலிய துறை, வட்டார போக்குவரத்து பிரிவு, போக்குவரத்து போலீசார் சார்பாக சிவகாசியில் நடந்த டிரைவர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பில் அவர் பேசியதாவது: பெரும்பாலன விபத்துகளுக்கு டிரைவர்களே காரணமாக உள்ளனர். ஒரு டிரைவர் நினைத்தால் விபத்தின்றி ஓட்ட முடியும். விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும். மது அருந்தி, அலைபேசி பேசியப்படி வாகனங்களை ஓட்டக்கூடாது.அப்படி ஓட்டுபவர்களின் உரிமம் பறிமுதல் செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். பாபுபிரசாந்த் டி.எஸ்.பி., தலைமை வகித்தார்.இன்ஸ்பெக்டர்கள் திலகராணி, மலையரசி கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment