விலங்கு வதை தடுக்க கலெக்டர் தலைமையில் சங்கங்கள்

நாட்டு கோழி வளர்ப்பிற்கு மானியம்மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆயிரம் கோழிகள் வளர்ப்பதற்கு ஷெட் இருந்தால் கோழித்தீவனம், இன்குபேட்டர் ஆகியவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இந்தாண்டு 55 பேர் இலக்கில் 41 பேர் பூர்த்தி செய்யப்பட்டு விட்டனர்.

செயற்கை கருவூட்டல் திட்டம்மத்திய அரசின் மூலமாக தேசிய செயற்கை கருவூட்டல் பணி திட்டம் தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 13 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நடந்த திட்ட பணிகளில் பகுதி 1, 2 செயல்படுத்தப்பட்டு 70 ஆயிரம் கால்நடைகள் பயனடைந்துள்ளன. இந்தாண்டு இலக்காக 88,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கருவூட்டல் முறையால் பயன்இந்தாண்டு ஆக. 1 முதல் 2022 மே 22 வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான உயர்ரக உறைவிந்து குச்சிகள் ரூ.25க்கு கிடைக்கும். இதன் மூலம் பால் உற்பத்தி அதிகரிக்கும். ஒன்றே கால் ஆண்டுக்கு கன்று பிறக்கும் முறை மாறி ஆண்டுக்கு ஒரு கன்று பிறக்கிறது. மாடுகளின் ஆரோக்கியமும் பெருகும்.விலங்கு வதை அதிகரிக்கிறதேகலெக்டரை நடுவராக கொண்டு விலங்கு வதை சங்கங்கள் அதிகளவில் அமைக்கப்பட உள்ளன.அவை மூலம் விலங்குவதை தடுப்பு சட்டம் குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விலங்கு வதையின் பாதிப்புகளை அவர்கள் புரிந்து கொண்டு ,வீட்டில் உள்ளவர்களுக்கு விளக்கினாலே வதை குறையும்.

ஆதரவின்றி திரியும் கால்நடைகளை பராமரிக்க வழிஆதரவின்றி திரியும் கால்நடைகளை பராமரிக்க ‘கேட்டில் பவுண்ட்’ என்ற கால்நடைகள் தங்கும் விடுதிகள் உள்ளன. மாவட்டத்தில் எங்கெங்கு உள்ளதென்பது கண்டறிந்து புனரமைத்து ,அங்கு கால்நடைகளை பராமரிக்க வழி ஏற்படுத்தப்படும்.கால்நடை விடுதிகளின் பங்கு என்னஉரிமையாளர் இருந்தும் ஆதரவின்றி திரியும் கால்நடைகளை பிடித்து பராமரிக்கப்படும். அன்றைய நாள் முடிவிலே உரிமையாளர்களிடம் எச்சரித்து அனுப்பி வைக்கப்படும். உரிமையாளர்கள் இல்லாத கால்நடைகள் அங்கேயே பராமரிக்கப்படும்.

கால்நடையில் புதிய திட்டங்கள் மேய்ச்சல் நில மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை ஊரக வளர்ச்சி முகமையுடன் இணைந்து கால்நடை துறைக்கு சொந்தமான நிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.மாவட்டத்தில் காரியாபட்டி கீழக்கரிசல்குளம், வத்திராயிருப்பு குன்னுார், சிவகாசி வேண்டுவராயம் பகுதிகளில் கால்நடை துறைக்கு 50 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தீவன பயிர்களை வளர்க்க உள்ளோம். இதில் உற்பத்தியாகும் தீவனம் ஊராட்சி தலைவரை தலைமையாக கொண்டு கால்நடைகளுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம்.

கால்நடை ஆம்புலன்ஸ் செயல்பாடுகால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் விருதுநகர் கால்நடை மருத்துவமனை மூலம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி 10 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விவசாயிகள் 1962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு கால்நடை அவசர சிகிச்சை தேவைகளை பூர்த்தி செய்யலாம், என்றார்.

Related posts

Leave a Comment