ரத்த தான முகாம்

விருதுநகர் : விருதுநகரில் விருதை பட்டாளம் படைவீரர்கள் நல சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடந்தது. தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். குருதி கொடையாளர்களுக்கு மாநில மருத்துவமனை தொடர்பு அதிகாரி இளையபாரி நற்சான்று, நினைவு பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை பொருளாளர் ரஞ்சித் குமார், செயலாளர் குருவையா, நிர்வாகி சரண்ராஜ் செய்தனர்.

Related posts

Leave a Comment