இருக்கன்குடியில் பசுமை விடியல் திட்டம்

சாத்துார் : சாத்துார் இருக்கன்குடியில் பசுமை விடியல் திட்டத்தை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.

இருக்கன்குடியில் 20 ஏக்கர் பரப்பில் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பயனற்ற நிலத்தை மேம்படுத்துவதற்கு பசுமை விடியல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் துவக்க விழாவில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவக்கி வைத்து கூறியதாவது: காரியாபட்டி ஒன்றியம் செட்டிகுளம் பகுதியில் 20 ஏக்கர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னுாரில் 6 ஏக்கரில் பணிகள் நடந்து வருகிறது.

பழமரக்கன்றுகள், மூலிகைகள் நடப்பட உள்ளது. மியாவாகி முறையில் அடர்வனக்காடு, நாற்றாங்கால், பண்ணை குட்டை , மேய்ச்சல் நிலம், சுற்றிலும் கம்பி வேலியும் அமைக்கப்படவுள்ளது, என்றார்.டி.ஆர்.ஓ., மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர் திலகவதி, கோட்டாட்சியர் புஷ்பா, ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரைராஜ், செயற்பொறியாளர் சக்தி முருகன், தாசில்தார் வெங்கடேஷ் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment