செய்திகள் சில வரிகளில்

தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம்

விருதுநகர்: தொழிலாளர் உதவி ஆணையர் ஹேமலதா: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் இன்றும்(ஆக. 26), நாளையும்(ஆக. 27) இரு நாட்கள் நடக்கிறது. இன்று அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஸ்ரீசவுடாம்பிகா பாலிடெக்னிக் , நாளை ராஜபாளையம் ரயில்வே பீடர் ரோடு சேத்துார் சேவுகப்பாண்டியன் ஆண்கள் பள்ளியிலும் நடக்கும் முகாம்களில் தடுப்பூசி போட்டு கொள்ளலாம், என்றார். 

நாற்றுகள் விற்றால் நடவடிக்கை

விருதுநகர்: விதை ஆய்வு துணை இயக்குனர் நாச்சியார் அம்மாள்: அனைத்து நர்சரி உரிமயைாளர்களும் உரிமம் பெற்றே நாற்றுகளை விற்பனை செய்ய வேண்டும். காய்கறி நாற்று உற்பத்தி செய்யும் போது விதை விற்பனையாளரிடம் பயிர் ரகம், விதை குவியல் எண், காலாவதி குறிப்பிட்டு ரசீது வாங்கி இருப்பு பதிவேட்டி பதிய வேண்டும். பதிவேட்டில் பதியாமலும், ரசீது வழங்காமலும் விற்பனை செய்யும் நர்சரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிமம் பெறாமல் நாற்றுகள் விற்பனை செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்

Related posts

Leave a Comment