ரயில்வே தரைப்பாலங்களில் தேங்கும் மழை; நீர்போக்குவரத்திற்கு இடையூறுடன் மக்கள் தவிப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டதின் பல இடங்களில் ரயில்வே தரைப்பாலத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.அதிகமாகும் போது சுற்றுகிராமங்கள் தீவுகளாக மாறும் நிலையும்உள்ளது. 

மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், சாத்துார், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார் என அனைத்து பகுதிகளிலும் ரயில் போக்குவரத்து உள்ளது. பல இடங்களில் ரயில் பாதையை வாகனங்கள் கடப்பற்கு தரைப்பாலங்கள் உள்ளன. இப்பாலங்களில் நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் நீர் வெளியேற்று அமைப்பு பராமரிப்பு இன்றி மண் மூடி உள்ளது. 

இதனால் சிறிய மழையில் கூட தரைபாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது. அனைத்து ரயில்வே தரைப்பாலங்களிலும் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவதற்கான வாறுகால் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். வாறுகாலுக்கான துளை தரை மட்டத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருப்பதால் அடிக்கடி மண் மேவி வாறுகாலில் அடைப்பு ஏற்படுகிறது. 

இதை முறையாக குறிப்பிட்ட கால இடைவெளி, மழை காலத்திற்கு முன்பாக ம் அடைப்பு அகற்றி பராமரிப்பது அவசியமாகிறது.ரயில்வே நிர்வாகம் சீர் கேடால் மழை காலங்களில் பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் பாலத்தை கடக்க முடியாது தவக்கின்றனர். பல நாட்கள் மழை நீர் தேங்கி கிடப்பதால் அதன்பின் பாலம் பகுதி சகதியுமாக காட்சியளிக்கிறது. 

இதனால் சுகாதாரக் கேடும் நிலவுகிறது. விருதுநகர், சூலக்கரை, மத்தியேசேனை. சிவகாசி,கோப்பை நாயக்கன் பட்டி,ஸ்ரீவில்லிபுத்துார்,சித்தாள முத்துார், சாத்துார், பெரிய கொல்லபட்டி, நரிக்குடி,மயிலி, மானுார்,ராஜபாளையம் ஐ.என்.டி.யு.சி. நகர் என பல பகுதியில் உள்ள பாலங்கள் ஒவ்வொரு மழையின் போதும் மழை நீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது………….

பராமரிப்பது அவசியம் 

சிறிய அளவில் மழை பெய்தால் கூட ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி விடுகிறது. சுற்றுகிராமங்கள் தனி தீவுகளாக மாறி விடுகிறது. இதனால் மழை பெய்த மகிழ்ச்சியை விட போக்குவரத்து திண்டாடமாகிவிடுமே என்கிற அச்சம் தான் அதிகமாகி விடுகிறது. ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்ட இடைவெளியில் தரைப்பாலத்தில் மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாயில் அடைத்து இருக்கும் மண்ணை அகற்றி பாராமரிக்க வேண்டும்.காளிதாஸ், மாவட்ட தலைவர் ம.நீ.ம.,விருதுநகர்………..

Related posts

Leave a Comment