தடுப்பூசி செலுத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை

விருதுநகர் : முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி: 9ம் வகுப்பு பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியம். தடுப்பூசி போட அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். 

எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், அலுவலர்கள் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். உடல் நலக்குறைவு அறுவை சிகிச்சை, வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் இருப்பவர்கள் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்ற பின் தடுப்பூசி செலுத்தலாம், என்றார்.

Related posts

Leave a Comment