வெற்றி பெற்ற வீரர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்

இந்திய தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு ஐந்து ரூபாய் பாடசாலை – ரைட் கிளப்ஃபார் எஜூகேஷன் மற்றும் ராயல் கிங்ஸ் இணைந்து கிரிக்கெட் போட்டி 2021 யை இன்று 29.08.2021 சிறப்பாக நடத்தினர் . இப்போட்டியை அழகாக தலைமையேற்று சிறப்பு விருந்தினராக ஊக்கப்படுத்தியவர் சிவகாசி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் உயர்திரு. V. விவேகன்ராஜ் மற்றும் முன்னிலை வகித்தவர்கள் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு. S. திலிபன் மஞ்சுநாத் , சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் திரு. R. கணேசன் மற்றும் மாவட்ட பிரதிநிதி திரு. S. ஜெயராமன் இவர்களுடன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு. S. கதிரவன் ஸ்ரீ அபிராமி இன்ஜினியரிங் சிவகாசி, எமது RCE யின் முன்னோடி வழிகாட்டி திரு. T. சந்திர ராஜன் மற்றும் எங்கள் RCE நிறுவனர் திரு. S. காளீஸ்வரன் இயக்குநர் திரு. S. சுரேஷ்பாபு தலைவர் திரு. K. சுமித் மற்றும் எங்கள் RCE குழுவினர் உதவியுடன் சிவகாசி ஈஞ்சார் மைதானத்தில் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன… இப்போட்டியில் 30 குழுக்களுடன் களமிறங்கி வெற்றி கண்ட முதலிடம் நாயகர்கள் சூப்பர் பாய்ஸ் ( SUPER BOYS ) நடுவப்பட்டி 10,000 பரிசுதொகை , இரண்டாமிடம் கிங் ஆப் கிங்ஸ்( KING OF KINGS ) 5,000 பரிசுதொகை மற்றும் மூன்றாமிடம் டி.என்.ஹெச்.பி. கார்ஸெஸ் ( TNHB HORSES ) 3,000 பரிசுதொகை மற்றும் நான்காவது இடம் தேவர் சாலை ( DEVAR SALAI ) 1,500 பரிசுதொகையைப் பெற்றனர்…. போட்டி ஆடுகளத்தில் ஆரோக்கியமாக நிறைவுற்றன…

Related posts

Leave a Comment