ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
நாகர்கோவிலில் நடக்கிறது
16 மாவட்டத்தினர் பங்கேற்கலாம்
முன்பதிவு நடக்கிறது


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மயிலாடுதுறை ஆகிய 16 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
இந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதனை ஜூலை 17 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இம்முகாமில் தொழில்நுட்ப பிரிவு சிப்பாய், விமான போக்குவரத்து தொழில்நுட்ப பிரிவு சிப்பாய், நர்சிங் அசிஸ்டன்ட் கிளார்க், ஸ்டோர் கீப்பர் போன்ற பிரிவுகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
விண்ணப்பித்தவர்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி தங்களது நுழைவுச்சீட்டு இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்தவர்கள் திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் சென்று டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த டோக்கன் இருந்தால் மட்டும் தான் நாகர்கோவில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் 0431-2412254 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ஆள் சேர்ப்பு குறித்த முழு விளம்பரத்தை https://joinindianarmy.nic.in/…/BRAVO…/Notfn.pdf பார்த்து தெரிந்து கொள்ளலாம் .ஆள் தேர்வு முகாமுக்கு கொண்டு வர வேண்டிய சான்றிதழ்களின் மாதிரி படிவம் பற்றிய விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உரியவரிடம் சான்றொப்பம் பெற்று வர வேண்டும்.

Related posts

Leave a Comment