உயர் நீதிமன்றதில், பள்ளிகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தல்..!!

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் , பள்ளிகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வலியுறுத்தப்பட்டது .திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனு : தமிழகத்தில் , ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர் களுக்கு செப் .1 முதல் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதித்தது . கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது .நேரடி வகுப்பு மட்டுமன்றி , ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய , அரசுக்கு உத்தர விட வேண்டும் . இவ்வாறு , மனு செய்தார் . 31 ல் தமிழக அரசுத் தரப்பு , பல நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின் , மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில் , பள்ளி களைத் திறக்க முடிவு செய்யப்பட்டது .

Related posts

Leave a Comment