TN TRB 2021: ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் ஆசிரியர்கள் வேலை!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) சார்பில், தமிழக அரசு கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி உதவியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் கிரேடு -1 உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2207 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.16 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பாட வாரியான காலியிடங்கள்: தமிழ் – 268 ஆங்கிலம் – 190 கணிதம் – 110 இயற்பியல் – 94 வேதியியல் – 177 விலங்கியல் – 106 தாவரவியல் – 89 பொருளாதாரம் – 287 வர்த்தகம் – 310 வரலாறு – 112 புவியியல் – 12 அரசியல் அறிவியல் – 14 வீட்டு அறிவியல் – 03 இந்திய கலாச்சாரம் – 03 உயிர் வேதியியல் – 01 உடல் இயக்குநர் தரம் I – 39 கணினி பயிற்றுவிப்பாளர் தரம் I – 39 சிறுபான்மை நடுத்தர ( Minority Medium) – 09 கல்வித் தகுதி : Post Graduate Assistant ஐடிஐ தேர்ச்சியா? மத்திய அரசின் ECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Physical Director Grade I தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.), Bachelor of Physical Education (BPE), Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Computer Instructor Grade I அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5 சதவிகிதம் மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : 01.07.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிசி முஸ்லீம்கள், பிசி, எம்பிசி மற்றும் டி-சமூகங்கள் மற்றும் அனைத்து சாதியிலும் ஆதரவற்ற விதவைகளுக்கு 05 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஊதியம் : ரூ.36,900 முதல் ரூ.1,16,600 மாதம்

Related posts

Leave a Comment