சிவகாசியில் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மேகநாதரெட்டி அவர்கள் வருகை

சிவகாசி மாநகராட்சியுடன் ஆனையூர் முதல் நிலை ஊராட்சி இணைக்கப்பட உள்ளதால் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மேகநாதரெட்டி அவர்கள் இன்று (16.09.2021) ஆனையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வருகை புரிந்து ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவர் லயன்கருப்பு ( எ ) திரு. லட்சுமிநாராயணன் அவர்களிடமும் சிவகாசி யூனியன் சேர்மன் திரு. விவேகன்ராஜ் அவர்களிடமும் கலந்துரையாடினார். உடன் துணை தலைவர் முத்துமாரி தங்கபாண்டியன் & ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களும் வார்டு உறுப்பினர்களும் & ஊராட்சி செயலாளர் திரு. நாகராஜன் அவர்களும் கலந்து கொண்டனர் #sivakasinewsin#sivakasiinfowww.sivakasinews.inwww.sivakasi.info

Read More

ஆனையூர் சமுதாயக் கூடத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும்ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

ஆனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட டெய்லர் காலனி சமுதாயக் கூடத்தில் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கும்ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் அங்கன்வாடிபணியாளர்களால் நடைபெற்றது. இதில் நமது ஊராட்சி மன்ற தலைவர் திரு லட்சுமிநாராயணன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் & துணைத் தலைவர் முத்துமாரிதங்கபாண்டியன் ஊராட்சி செயலாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read More

பணபரிவர்தனை செயலிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும்

ஆன்லைனில் செயலிகள் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும்போது ஏதேனும் பரிசு அல்லது பண வெகுமதி வழங்குவதாக லிங்க் வந்தால் அதை தொட்டு உள்நுழைய வேண்டாம், அதன்மூலம் உங்களின் வங்கி கணக்கிலிருந்து இணைய திருடர்கள் பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுவார்கள், பணபரிவர்தனை செயலிகளை பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும் #Sivakasinewsin#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs

Read More

உங்கள் தினசரி ஆற்றலையும், மனநிலையையும் பாதிக்கும் இந்த பழக்கங்களை இன்றே கைவிடுங்கள்…

அடிப்படையில் பலர் மன உளைச்சலில் இருப்பர். அது நாளடைவில் அவர்களில் ஒரு நெகடிவ் வைப்ரஷனை ஏற்படுத்தி அவர்கள் மன உறுதியை குழைப்பதோடு தினசரி ஆற்றலையும் குறைக்கும். இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. ஒரு சிலர் வெளிப்படையாக பேசுவர், ஒரு சிலர் எதையும் மனதிலேயே வைத்துக்கொள்வர். ஒரு சிலர் நகைச்சுவையாக பேசி பிறருக்கு ஆறுதல் வழங்குவர். அதன்படி ஒவ்வொருவருக்குள்ளும் தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கின்றன. மேலும், ஒருவரின் அனைத்து குணாதிசயங்களும், பழக்கவழக்கங்களும் வெளிப்படையாக தெரியாது.என்னதான் ஒருவர் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பது போல தெரிந்தாலும் தனிப்பட்ட உணர்வின் அடிப்படையில் பலர் மன உளைச்சலில் இருப்பர். அது நாளடைவில் அவர்களில் ஒரு நெகடிவ் வைப்ரஷனை ஏற்படுத்தி அவர்கள் மன உறுதியை குழைப்பதோடு தினசரி ஆற்றலையும் குறைக்கும். அப்படி, நீங்கள் உங்கள் தினசரி ஆற்றலை குறைக்கும் கீழ்காணும் பழக்கவழக்கங்களை…

Read More

விருதுநகர் மாவட்ட தினசரி தடுப்பூசி அறிக்கை 15.09.2021 நிலவரப்படி

விருதுநகர் மாவட்ட தினசரி தடுப்பூசி அறிக்கை 15.09.2021 நிலவரப்படி .#COVID19#GetVaccinatedNow#VaccineSavesLives#Virudhunagar#Sivakasinewsinwww.sivakasi.info, www.sivakasinews.in

Read More

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சூலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இன்று(15.09.2021) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், “சுதந்திரதின அமுத பெருவிழா மற்றும் தூய்மையே சேவை” என்னும் நிகழ்வை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கம் மூலம் மக்களிடையே தூய்மை, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். #virudhunagar#Sivakasinewsinwww.sivakasinews.in

Read More

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை.

விருதுநகர் மாவட்டம் போலியாக உரபற்றாக்குறை ஏற்படுத்தினால் உரிமம் ரத்து, உர விற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் எச்சரிக்கை.

Read More