உங்கள் தினசரி ஆற்றலையும், மனநிலையையும் பாதிக்கும் இந்த பழக்கங்களை இன்றே கைவிடுங்கள்…

அடிப்படையில் பலர் மன உளைச்சலில் இருப்பர். அது நாளடைவில் அவர்களில் ஒரு நெகடிவ் வைப்ரஷனை ஏற்படுத்தி அவர்கள் மன உறுதியை குழைப்பதோடு தினசரி ஆற்றலையும் குறைக்கும்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. ஒரு சிலர் வெளிப்படையாக பேசுவர், ஒரு சிலர் எதையும் மனதிலேயே வைத்துக்கொள்வர். ஒரு சிலர் நகைச்சுவையாக பேசி பிறருக்கு ஆறுதல் வழங்குவர். அதன்படி ஒவ்வொருவருக்குள்ளும் தனிப்பட்ட குணாதிசயங்கள் இருக்கின்றன. மேலும், ஒருவரின் அனைத்து குணாதிசயங்களும், பழக்கவழக்கங்களும் வெளிப்படையாக தெரியாது.
என்னதான் ஒருவர் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பது போல தெரிந்தாலும் தனிப்பட்ட உணர்வின் அடிப்படையில் பலர் மன உளைச்சலில் இருப்பர். அது நாளடைவில் அவர்களில் ஒரு நெகடிவ் வைப்ரஷனை ஏற்படுத்தி அவர்கள் மன உறுதியை குழைப்பதோடு தினசரி ஆற்றலையும் குறைக்கும். அப்படி, நீங்கள் உங்கள் தினசரி ஆற்றலை குறைக்கும் கீழ்காணும் பழக்கவழக்கங்களை கொண்டிருந்தால். அதிலிருந்து மீளும் வழியை காணுங்கள்.
கடந்த காலம் : எல்லோருக்கும் கஷ்டங்கள் என்பது இருக்கத்தான் செய்யும் அதை கடந்து வருவதே வாழ்க்கை. ஆனால் பிரச்னை வந்துவிட்டதே அல்லது என் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் நிகழ்ந்து விட்டதே என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது காட்டாயம் உங்கள் நிகழ்காலத்தை பாதிக்கும். அனைத்து கஷ்ட நஷ்டங்களையும் கடந்து செல்ல வேண்டும்.
சமூக ஊடகம் : நாள் முழுவதும் ஒருவர் சோசியல் மீடியாவில் ஈடுபடுவதன் மூலமும் அவர்களின் ஆற்றல் குறையலாம். ஏனெனில், சமூக ஊடகத்தில் மூழ்கும் ஒருவர் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்கால வாழ்க்கையை இழக்கிறார்.
தனிப்பட்ட கோபங்கள் : எந்த ஒரு விஷயத்தையும் தனிப்பட்ட முறையில் மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ள கூடாது. ஏனெனில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உண்மையில் உங்களை புண்படுத்துவதற்காக எதையும் சொல்ல போவதில்லை.

Related posts

Leave a Comment