‘இடியாப்ப பரம்பரையை வீழ்த்திய சார்பட்டா பரம்பரை’.. சிஎஸ்கே அபார வெற்றி பெற்றது எப்படி?

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. 

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப் பரீட்சை நடத்தின. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்கமே அதிர்ச்சி இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியில் தொடக்கமே சரிவாக தான் இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஓப்பனிங் வீரர் பாஃப் டூப்ளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய மொயின் அலியும் 2வது ஓவரில் கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். இதனால் முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது.

மிடில் ஆர்டர் சொதப்பல் அணியின் நம்பிக்கை வீரராக பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 4 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். போல்ட் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற ரெய்னா 4 ரன்களுக்கு கேட்ச்சானார். இதனால் அணியை மீட்க முன்கூட்டியே களத்திற்கு வந்த தோனி 3 ரன்களுக்கு வெளியேறினார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 24 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

சவால் இலக்கு இதன் பின்னர் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ருத்ராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ருத்ராஜ் அதிரடியாக விளையாடி 88 ரன்களை குவித்தார். அவருக்கு ஏற்றார் போல ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் அந்த ஜோடி 5வது விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடி வந்த ஜடேஜா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் டுவைன் பிராவோ அதிரடி காட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை சேர்த்தது.

மும்பை அணி 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி தொடக்கத்திலேயே பல அடிகளை சந்தித்தது. அதிரடியாக விளையாடிய டிக்காக் 17 ரன்களுக்கும், அன்மோல்ப்ரீத் சிங் 16 ரன்களுக்கும் அவுட்டாகினர். மிடில் ஆர்டரில் நம்பிக்கையாக இருந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்களும், இஷான் கிஷான் 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

சிஎஸ்கே வெற்றி நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட கெயிரன் பொல்லார்ட் ஹாசல்வுட் வீசிய பந்தில் 15 ரன்களுக்கு எல்.பி.டபள்யூ ஆனார். இதன் பிறகு மும்பை அணி வரிசையாக விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த சௌரப் திவாரி 40 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். எனினும் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related posts

Leave a Comment