Inspiring- Aruljothi Subramaniam

#MustReadPost பள்ளிப்படிப்பு முடிந்த கையோடு பெண்ணுக்கு திருமணம் செய்து “கடனை” முடித்து விடும் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவள். கைநிறைய பதக்கங்களுடனோ, சான்றிதழ்களுடனோ வரும்போது கூட அதையெல்லாம் என்னவென்று கூட பார்க்காமல், சுப்பு பொண்ணுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்னு இருக்க என்று கேள்வி கேட்பவர்கள் சூழத்தான் அமைந்திருந்தது எல்லோருக்கும் போல எனக்கான வாழ்வும் . ஆனால் அப்பாவோ இந்த சமுதாய அழுத்தத்தைத் வேறுவிதமாக கையாண்டார். “ஏன் புள்ள படிப்புச் செலவுக்கு நீ ஏதும் கொடுக்க போறியா?” “அவ படிக்கற படிப்ப நீ படிச்சிருவியா” “உன்ற பையன மாதிரி ஆடு மேய்க்க சொல்றியா” , என்று கேட்டவன் ஏன்டா கேட்டோம் என்று நினைக்குமளவிற்குத் தான் இருக்கும் அவரது பதில்கள், திருமதி ஆகும் முன், முனைவர் ஆக்கி அழகு பார்த்தார். ஆம், விவசாயக் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறைப் பட்டதாரி, டாக்டர். அருள்ஜோதி சுப்ரமணியம் ஒருநாளைக்கு 5 முறை மட்டுமே அதுவும் ஒரே ஒரு பேருந்து , பாதி நாள் பல பிரச்சினைகளால் பேருந்தே வராத ஊரில் 5 மைல் நடந்தோ, சைக்கிளிலோ பள்ளிக்கு சென்று படித்து வந்து, அப்பா கால் வலிக்குது ப்பா என்று புலம்பினால் , அட இதெல்லாம் ஒரு பிரச்சனையா, அமெரிக்காவில், நாசாவில் பொம்பளைங்க ராக்கெட் விட்றாங்களாம் , நீ என்னடான்னா இந்த சின்ன விஷயத்துக்கு போய் பொலம்பற ன்னு (எங்க இந்த காரணத்தினால் படிப்பு நின்னிருமோன்னு) அதெல்லாம் நீ சமாளிச்சுடுவ போ ..இதுக்கே இப்படி சொன்ன அப்பறம் எப்படி நாசா போறதாம் என்பார். இரவெல்லாம் கால் அமுக்கிவிட்டு, காலையில் நண்பர்களுடன் பேருந்து வராதததற்கான பிரச்சனைகளை சரி செய்யச் செல்வார். அப்போதெல்லாம் நீ கல்லூரி போய் இளங்கலை படிப்பாய் என்று சொல்லியிருந்தால் கூட நம்பியிருக்க மாட்டேன், என் தகப்பனோ நாசா வரை எனைக் கனவு கண்டார், இன்று அமெரிக்காவின் ஃபெடரல் இன்ஸ்ட்டியூட்டில் சயின்டிஸ்ட் ஆக இருக்கிறேன். அப்பா, அமேரிக்கா வந்த போது நாசா வுக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.இது போல், ஆயிரம் தடைகள், அப்பா தான் நான் விழும் போதெல்லாம் வலி எல்லாம் சாதாரணம், இயற்கை, வலிக்காம இருந்தா தேங்கி தான் போகணும் ..ஓடணும்னு தான் ஆசைப்பட்டா, கல்லு மலை எல்லாம் தாண்டி தான் ஓடணும், ஓடு ன்னு தேற்றும் மந்திரம் ! இன்னமும் தொலைபேசி அழைப்பின் எடுத்தவுடன், வரும் “தங்கம்” ன்ற ஒரு வார்த்தை போதும் எனக்கு ! நீ ஏன் எல்லாரையும் போல இல்ல (அது என்னனு தெரிஞ்சா சொல்லவும்), அப்படின்னு கேக்கும் போதெல்லாம் (கேக்கறாங்க –அவங்களுக்கு தான் இது) எங்கப்பாவோட குரல் கேக்கும் நான் ஏன் உங்க எல்லாரையும் போல இருக்கணும்? அசுரன்- அப்பா !அம்மா-அப்படியே நான் எதுவோ அதுவாக என்னை நம்பி என் முடிவுகளை ஏற்றுக்கொண்டு ஆதரித்து துணை நிற்கிற ஜீவன்.அவன் கெடக்கறான் அவனுக்கு ம..ரா தெரியும் என் புள்ளைய பத்தி … நீ உன் படிப்பை பாரு, உன் வேலையை பாரு , உனக்கு புடிச்சத பண்ணு , புடிச்ச டிரஸ் போட்டுக்கோ, நெனச்ச இடம் போ, புடிச்ச மாதிரி இரு, முடிஞ்சா மத்தவங்களுக்கு உதவி பண்ணு என்றெல்லாம் சொல்லி வளர்த்த என் அப்பா ஒரு கிராமத்து விவசாயி !சமுதாய அழுத்தம் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை விடவும் உங்கள் குழந்தைகளை, உடன் இருப்புவர்களை நீங்கள் போற்றுங்கள். துணை நில்லுங்கள் ! அவர்கள் உரிய இடத்தை அடைவார்கள்!! #InspiringAruljothi Subramaniam

Related posts

Leave a Comment