தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு தேசிய பா.ஜ.,வில் புதிய பொறுப்பு

புதுடில்லி: பா.ஜ.க., தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பா.ஜ.,வின் தேசிய செயற்குழுவில் நரேந்திர மோடி, மூத்தத் தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி, பியூஷ் கோயல் உள்ளிட்ட 80 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில், இக்குழுவுக்கு 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்தர அழைப்பாளர்களை பா.ஜ.க., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து குஷ்பு, ஹெச்.ராஜா இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்னை சிறப்பு அழைப்பாளராக நியமித்துள்ளதற்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா ஆகியோருக்கு குஷ்பு, ஹெச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, குஷ்பு இன்று (அக். 07) தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இது எனக்கு மிகவும் பெருமையான தருணம்,” என பதிவிட்டுள்ளார்.

#Sivakasinewsin #virudhunagardigital #thiruppathidigital #virudhunagar #sivakasi

Related posts

Leave a Comment