முகக் கவசமே உயிர் கவசம்
நமது சட்டமன்ற உறுப்பினர் AMSG.அசோகன் அவர்களிடம் நேற்று (01.06.2021) இரவு 8.30 மணியளவில் COVID FREE SIVAKASI (தொற்றில்லா சிவகாசி) எனும் தன்னார்வ அமைப்பு சிவகாசி, பராசக்தி காலனி பகுதியில் கிட்டத்தட்ட 25 நபர்களுக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ளது... நெருங்கிய வீடுகளைக் கொண்ட தெருக்களாக உள்ள பகுதி. அப்பகுதி மக்கள் நம் உதவி மையத்தை தொடர்பு கொண்டு மக்களுக்கு முக கவசம் பற்றிய விழிப்புணர்வு இல்லை தங்கள் தெருமக்களுக்கு தயவுகூர்ந்து முக கவசம் வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கூறினர்... தன்னார்வ அமைப்பை தொடர்பு கொண்டுள்ளனர் அவர்கள் நமது சட்டமன்ற உறுப்பினரை அணுகியதும்
உடனடியாக அவர்களை வரச்சொல்லி "முகக் கவசமே உயிர் கவசம்" என்று அம் மக்களுக்கு அறிவுறுத்த வலியுறுத்தி 1000 முகக்கவசம் வழங்கினார்.