சிவகாசியில் ஆளில்லா குட்டி விமானம் உருவாக்கும் பயிற்சி
ஆளில்லா குட்டி விமானம் உருவாக்கும் பயிற்சி
லயன்ஸ் கிளப் சிவகாசி 60வது வைர விழாவை முன்னிட்டு இந்த வருடத்தின் 400வது சேவையாக சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு ஆளில்லா குட்டி விமானம் உருவாக்கும் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி சிவகாசியில் உள்ள பல்வேறு பள்ளி மாணவர்களை இணைத்து அரசன் மாடல் பள்ளியில் (ஜூனியர் கேம்பஸ்) அரிமா A.M.S.G.அசோகன் அவர்களது தலைமையில் சிவகாசி அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா பிரபாகரன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவசக்தி பாலன் மற்றும் சங்க உறுப்பினர்கள், விங் விசார்ட் தொழில்நுட்ப கம்பெனியின்
நிறுவனர் கார்த்திக் மற்றும் பயிற்றுநர் கிருஷ்ணமூர்த்தி, ஐந்து ரூபாய் பாடசாலை (Right club for Education ) நிறுவனர் காளீஸ்வரன் மற்றும் செயலாளர் அருண் குமார், ஆலோசகர் திரு.சந்திர ராஜன் ( Rt SBI officer ) மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நடத்தினர்.
இந்த பயிற்சியில் ஆளில்லா குட்டி விமானத்தின் அடிப்படை , அனைத்து பாகங்கள், அசெம்பிளிங் , ப்ரோக்ராமிங் , பறக்கும் மாதிரி அனைத்தும் செய்யப்பட்டது.
செயல்முறை கற்றல் ஊக்குவிக்கப்பட்டது.
இந்த வகுப்பில் YRTV, Sivakasi lions school , Rotary school , Jaycees school , மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, SHNV மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து விழாவை சிறப்பித்தனர்.