வாலிபால் போட்டியில் தங்கப்பதக்கம் ;மாற்றுத்திறனாளி மாணவர் சாதனை
ஸ்ரீவில்லிபுத்துார் : கிருஷ்ணன்கோயில் கலசலிங்கம் பல்கலையின் மாற்றுத்திறனாளி மாணவர் நவீன்சதீஷ்கனி விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து வருகிறார்.
சிவகாசி தீப்பெட்டி தொழிலாளிகள் ராஜபாண்டி-ராஜக்கனி தம்பதியின் மகன் மாற்றுத்திறனாளி நவீன்சதீஷ்கனி. கலசலிங்கம் பல்கலையில் எம்.பி.ஏ. முதலாமாண்டு படிக்கிறார். வாலிபால் பெடரேசன் சார்பில் தாய்லாந்தில் நடந்த சர்வதேச வாலிபால் போட்டியில் வெள்ளி, தமிழ்நாடு பாராலிம்பிக் அசோசியேசன் சார்பில் கோவையில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலம் வென்றார்.
மாநில வாலிபால் போட்டியில் தங்கம், தென்மண்டல அளவில் கர்நாடகாவில் நடந்த வாலிபால் போட்டியில் வெள்ளி வென்றார். ஒலிம்பிக் போட்டியில் விளையாடி இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே குறிக்கோள் என நவீன்சதீஷ்கனி கூறினார். அவரை துணை தலைவர் சசிஆனந்த், துணை வேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன், பேராசிரியை விஜி பாராட்டினர்.