Abj food bank
அனைவரும் அறிந்ததே. எந்த இக்கட்டான காலங்களிலும் மக்களுக்காக களத்தில் இறங்கி சேவை செய்து வருகிறது. இந்த கொரோனா பாதித்த காலங்களிலும் தங்கள் சுயநலம் பார்க்காமல் ஆதரவு இல்லாத மக்கள் பசியோடு வாழக்கூடாது என்ற கொள்கையோடு களத்தில் இறங்கி நமது தன்னார்வலர்கள் துணையோடு செயல் பட்டு வருகிறது. இன்று நமது மத்திய, மாநில அரசுகளின் கொள்கைப்படி ஆதரவு இல்லாத அனைத்து மக்களுக்கும் பசிக்கு உணவு வழங்கும் திட்டத்தின் படி நமது விருதுநகர் மாவட்ட துணை ஆட்சியர் அன்பு சகோதர் திரு. தினேஷ் குமார் அவர்களின் பெரும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் இன்று முதல் 50நபர்களுக்கு உணவு தானமாக வழங்கப்பட்டது, நாளை முதல் பசியோடு ஆதரவு இல்லாத மக்கள் இருக்க கூடாது என்ற அரசாங்க கொள்கையை செயல் படுத்தும் நோக்கில் ஒவ்வொரு பகுதியிலும் நமது தன்னரவலர்களை கொண்டு கணக்கு எடுக்கும் பணி நடை பெற்று வருகிறது. இதன் படி ஆதரவு இல்லாத அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கும் திட்டத்தை துணை ஆட்சியர் துணையோடு நமது சிவகாசி எபிஜே உணவு வங்கி செயல் படுத்த உள்ளது. ஆகையால் அன்பு நண்பர்கள் உங்கள் பகுதியில் ஆதரவு இல்லாத மக்கள் உணவுக்காக எங்கு கஷ்ட பட்டாலும் எங்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவியுங்கள், நாங்கள் அரசாங்க துணையுடன் மூன்று வேலையும் உணவு வழங்க தயாராக உள்ளோம். இதனை உங்கள் அனைத்து குரூப்புக்கும் forward செய்யுங்கள். யாருக்காவுது இந்த நேரத்தில் மிகவும் உதவியாக இருக்கும். இந்த சிறந்த சேவை பணிக்கு நமது துணை ஆட்சியரின் சிறப்பான வழிகாட்டுதலின் படி செயல் படும் தாசில்தார், BDO, RI, DSP, சிவகாசி நகராட்சி ஆணையாளர், மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெரும் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம். அரசாங்கத்தோடு இணைந்து செயல் பட்டால் எத்தகைய இக்கட்டான நேரத்திலும் நமக்காக அவர்கள் சேவை செய்ய தயாராக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள இது தான் சிறந்த தருணம். ஆகையால் அரசாங்கத்தை குறை கூறாமல் வாருங்கள் அவர்களோடு இணைந்து மக்களுக்கு தேவையான மாற்றத்தை உருவாக்குவோம். நன்றி. என்றும் அன்பையும், மனிதத்தையும் மட்டுமே மக்களிடம் விதைத்து கொண்டிருக்கும் உங்கள் அன்பு எபிஜே. சலீம். செல் -78711 66599/98650 36638.உணவு &எதையும் வீணாக்காதீர்கள் !youtube-Atchayapathiram Abj food bank, sivakasi, Tamilnadu, India. /அட்சயபாத்திரம் எபிஜே உணவு வங்கி, சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா. F/B-எபிஜே உணவு வங்கி.